வரம் தந்தவருக்கு எதிராக வாயைக் கொடுத்து, பதவியை இழந்து விட்டார் திருவண்ணாமலை திமுக மாவட்ட பொறுப்பாளர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் சிவானந்தம் பதவி பறிக்கப்பட்டு, துணை செயலாளராக இருந்த தரணிவேந்தன், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார். சிவானந்தம், 2014 ல் நடந்த மக்களவை தேர்லில் போட்டியிட்டு, தோற்று விட்டார். தேர்தல் செலவுக்காக, கரூர் தனியார் நிதி நிறுவனத்திடம், 3 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். 

அதற்கு இதுவரை வட்டியும், அசலும் கட்டவில்லை. இந்த விவகாரம் காவல்துறை வரை புகாராக, சமீபத்தில் சிவானந்தத்தை போலீசார் விசாரித்துள்ளனர். அதை விட, மற்றொரு விவகாரம் தான் சிவானந்தத்தின் பதவியை காவுவாங்கக் காரணமாக இருந்துள்ளது. கரூர் நிதி நிறுவனத்தில் சிவானந்தத்துக்கு கடன் வாங்கி தந்ததே, இதே மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தான். 

இவர், ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கம்.  அவரைபற்றி இப்படி விமர்சித்து இருக்கிறார் சிவானந்தம்... ‘’எ.வ.வேலு வேற கட்சியில் இருந்து வந்தவர். நான் தான் பரம்பரை தி.மு.க.,காரன்’’ எனக் கூறியிருக்கிறார். அது தான் அவரது பதவியை பறித்து விட்டதாக கூறுகிறார்கள் கழக உடன்பிறப்புகள்.