Asianet News TamilAsianet News Tamil

வணக்கம் நான் ரஜினி பேசுகிறேன்..! எடப்பாடியாரிடம் என்ன பேசினார் சூப்பர் ஸ்டார்?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இன்று நள்ளிரவு முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு பேசிய தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hello I'm talking Rajini..superstar spoke to Edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Jun 18, 2020, 10:05 AM IST

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இன்று நள்ளிரவு முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு பேசிய தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு நடிகர் ரஜினி வீட்டில் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. முதலமைச்சரிடம் ரஜினி பேச விரும்புவதாக கூறியுள்ளனர். உடனடியாக இந்த தகவல் எடப்பாடிக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது. அவரும் தயக்கம் இல்லாமல் உடனடியாக ரஜினியிடம் பேச சம்மதம் தெரிவித்துள்ளார். அடுத்த நிமிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்போனுக்கே ரஜினி நேரடியாக அழைத்ததாக கூறுகிறார்கள்.

Hello I'm talking Rajini..superstar spoke to Edappadi palanisamy

ரஜினி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் 20 நிமிடம் வரை நீடித்ததாக சொல்கிறார். காலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய செயலாளர் ஒருவருக்கு கொரோனா என்று தகவல்கள் பரவின. இதனை அடுத்தே ரஜினி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். அப்போது, தனது அலுவலக ஊழியர்கள் யாருக்கும் கொரோன இல்லை என்றாலும், தனது அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்று கூறப்படும் தகவல் உண்மை இல்லை என்றும் எடப்பாடி ரஜினியிடம் எடுத்துரைத்தாக சொல்கிறார்கள்.

Hello I'm talking Rajini..superstar spoke to Edappadi palanisamy

வயது மூப்பால் நோய் வாய்ப்பட்டே அந்த ஊழியர் மரணித்ததாகவும் வழக்கம் போல் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தவறான அரசியல் செய்வதாகவும் எடப்பாடி கூறியுள்ளார். இதனை கேட்டுக் கொண்டு ரஜினி, முதலமைச்சரை மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் படி கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதன் பிறகு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிலவற்றை ரஜினி பாராட்டியதாகவும், மீண்டும் முழு ஊரடங்கு என்பது துணிச்சலான முடிவு என்று தட்டிக் கொடுத்ததாகவும் கூறுகிறார்கள்.

Hello I'm talking Rajini..superstar spoke to Edappadi palanisamy

இதனை தாண்டி சென்னையில் கொரோனா கட்டுக்கடங்காமல் போனது எப்படி என்பதையும் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ரஜினியிடம் எடுத்துக் கூறியதாகவும், மக்கள் ஒத்துழைக்க மறுப்பதை மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டதாகவும் சொல்கிறார்கள். சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்தாலே கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்றாலும் மக்களை அதனை செய்யத் தயாராக இல்லை என்பதையும் எடப்பாடி ரஜினியிடம் வருத்தத்துடன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்து தருமாறு ரஜினியிடம் எடப்பாடி கேட்டதாகவும் அதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள்.

Hello I'm talking Rajini..superstar spoke to Edappadi palanisamy

மேலும் தமிழகத்தில் கொரோனவை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் சிலவற்றை பற்றியும் ரஜினி – எடப்பாடி பேசியுள்ளதாக சொல்கிறார்கள். அதிமுக அரசை ரஜினி அவ்வப்போது குறை சொல்வது வழக்கம். இதனால் ரஜினி மீது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவில் மதிப்பு இருந்தது இல்லை. ஆனால் கொரோனா கால கட்டத்தில் ரஜினி நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது எடப்பாடி பழனிசாமியை ஆச்சரியத்தில்ஆழ்த்தியதாக சொல்கிறார்கள்.எது எப்படியோ இந்த கொரோனா கால கட்டத்திலும் ரஜினி வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனில் இருந்து முதலமைச்சர் அலுவலகத்திற்கு டைரக்ட் லைன் உருவாகிவிட்டது என்று இதனை மையமாக வைத்து அரசியல் களம் சலசலப்புக்கு உள்ளாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios