பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி முட்டை ஆகியவை சாப்பிடுவதால் புற்றுநோய் வைரஸ் வராது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க  பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.   இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் . சுமார்  98 ஆயிரத்திற்கும்  அதிகமானோருக்கு  வைரஸ் தாக்கம்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 . 

இந்நிலையில்  இந்தியாவிலும் இந்த வைரஸ் தன் வேலையை காட்டத் தொடங்கியுள்ளது .  இதனால் நாடு முழுவதும் இந்த வைரஸை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .  இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,  இதுவரையில் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது .  ஆனால் தமிழகத்தில் இன்று வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதால் நோய்  தாக்கம் இல்லை , பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து எவ்விதமான பதட்டமும் பயமும் அடைய தேவையில்லை . 

அதேபோல் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் , அதே நேரத்தில் பொது மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் .  பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி ,  முட்டை ஆகியவை சாப்பிடுவதால் நோய் பரவுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது .  சீனாவில் இந்த நோய் தாக்கத்தால் இரண்டு  சதவீத இழப்புதான் என்று கண்டறியப்பட்டுள்ளது . அதே நேரத்தில் சீனாவைத் தவிர மற்ற இடங்களில் இறப்பு சதவீதம் 0.2 சதவீதம்தான் .  நோயை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு தீவிரமாக எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார் .