Asianet News TamilAsianet News Tamil

யார்யாரெல்லாம் கொரோனா டெஸ்ட் எடுக்கணும் தெரியுமா..!! அமைச்சர் சொன்ன அதிரடி விளக்கம்..!!

இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்றவற்றிற்கு உள்ள மருந்துகளை கூட்டு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது .  கூட்டு மருந்து குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்,

health minister vijaya baskar explain about who will take screening test about corona virus
Author
Chennai, First Published Mar 19, 2020, 2:08 PM IST

கொரோனா  வைரஸ் நோய் சம்பந்தமாக யார்யார் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார் .  சாதாரண காய்ச்சல் இருமல் சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தங்களுக்கும் கொரோனா வந்திருக்குமோ என பீதியடைந்து வருகின்றனர் .  இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார் .  கரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது .  இந்தியாவை நோக்கி 69 பேருக்கு குர்ஆனும் உறுதி செய்யப்பட்டுள்ளது .  

health minister vijaya baskar explain about who will take screening test about corona virus

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது .   மொத்தம் நான்கு கட்டங்களில் தாக்கக்கூடியது  கரோனா வைரஸ் என தகவல் வந்துள்ளது நிலையில்  இந்தியா அதில் இரண்டாவது கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது .  நேற்று சட்டசபையில் திமுக உறுப்பினர்  பொன்முடி கொரோனா  வைரஸ் பரிசோதனை தனியார் மருத்துவமனைகளில்  செய்ய அனுமதி வழங்கப்படுமா என்று துணைக் கேள்வி எழுப்பினார் , 

health minister vijaya baskar explain about who will take screening test about corona virus 

 இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுவாக ஒரு பரிசோதனை மையத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் ,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா  பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது .  தமிழகத்தில் ஐந்து இடங்களில் உள்ள பரிசோதனை கூடங்களில் நாளொன்றுக்கு 600 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.  அதேபோல் அப்பல்லோ ,  வேலூர் சிஎம்சி போன்ற சிறப்பான வசதி கொண்ட தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா  வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதி பெற்று அனுமதிக்கப்படும் .  அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகள் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

health minister vijaya baskar explain about who will take screening test about corona virus

அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப்படும் ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வந்த தனியார்  நிறுவன ஊழியர் ஒருவர்,   தனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவேண்டும் என டாக்டரிடம் கேட்டுக்கொண்டார் .  அவரிடம் நீங்கள் நோய் பாதித்த மாநிலங்களுக்கோ , நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்று சொன்னார் . ஆனால்  தங்கள் அலுவலகத்தில் இதுபோன்ற சான்றிதழ் வாங்கி வரச்சொல்லுவதாக கூறினார்.   அவரிடம் இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் இருக்கிறதா என்று டாக்டர்கள் கேட்டனர் அவர் இல்லை என்றார் ,  இந்த மூன்று அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா  வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது  அவர் அங்கிருந்து சென்றார் அதாவது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் மாநிலத்துக்குச் சென்று வந்தவர்கள் தான் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார் . 

health minister vijaya baskar explain about who will take screening test about corona virus

இதற்கிடையில் குறிக்கிட்டு பேசிய எதிர் கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள்  வெளியாகியுள்ளன இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா என்று கேட்டார் ,  அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரசுக்கு இன்னும் நேரடி மருந்து கண்டுபிடிக்கவில்லை.  ஆனால் சப்போர்ட்டிங் மருந்துகள் உள்ளன .  இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்றவற்றிற்கு உள்ள மருந்துகளை கூட்டு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது .  கூட்டு மருந்து குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்,  மற்ற மாநிலங்களில் நடைபெறும் ஆய்வு குறித்தும் அறிந்து வருகிறோம் . கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios