Health Minister CV Vijayabaskar interviewed the Government of India to reform the Indian Medical Commission

இந்திய மருத்துவ ஆணையம் என்ற சீர்திருத்தத்தை மத்திய அரசு செய்கிறது என்று சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். புதிய சட்டத்தில் சில அம்சங்களை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார். மருத்துவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகே மருத்துவ ஆணைய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ கவுன்சிலை அமைப்பதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இந்த மசோதாவுக்கு கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழக்கியது. இந்த புதிய ஆணையத்தின்மூலம் 4 தன்னாட்சி வாரியங்களை அமைத்து இளங்கலை, முதுநிலை பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு, மருத்துவர்கள் பதிவீடு போன்றவற்றை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. 

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இதைதொடர்ந்து, மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆணையம் என்ற சீர்திருத்தத்தை மத்திய அரசு செய்கிறது என்று சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். புதிய சட்டத்தில் சில அம்சங்களை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார். மருத்துவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகே மருத்துவ ஆணைய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.