லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழில் பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.  

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாட்டுக்காக சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது

.

இதே போல் தமிழகத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசின் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது. லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக அதன் நிர்வாகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்-சூட் அணிந்து கலந்து கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அந்த விழாவில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழில் பேசினார். தமிழ் தெரியாதவர்கள் அதிகம் பங்கேற்ற அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழில் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலத்தில் அவர் எழுதி வைத்து பேசியிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

வெளிநாட்டு விழாக்களில் இதுவரை பங்கேற்ற தமிழக முதல்வர்கள் தமிழில் பேசியதே இல்லை. முதன் முறையாக தமிழில் பேசி எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார்.