தன் மீது ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக திருமாவளவன் சர்ச்சையாக பேசுவதையே கொள்ளையாக வைத்திருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பூ குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை மாநகர் பாஜக சார்பில் தெப்பக்குளம் நடன நாயகி மந்திர் வளாகத்தில் இன்று நம்ம ஊர் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாஜக வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பாஜக எங்கிருக்கிறது என்று கேட்டனர். இப்போது தெருக்கு தெரு பாஜக கொடி பறக்கிறது. 2021- தேர்தலில் பாஜக வெற்றியை அனைவரும் பார்க்கப்போகின்றனர்.

பேரவைத் தேர்தலில் கட்சி தலைமை சொன்னால் மு.க.ஸ்டாலின் அல்ல யாரை எதிர்த்து போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். பேரவைத் தேர்தலில் பாஜக எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பதை மாநில தலைவர் தான் அறிவிப்பார்.

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள், விநாயகர் இந்தி கடவுளா என்று திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு தன் மீது ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காகவே திருமாவளவன் சர்ச்சையாக பேசுவதையை கொள்கையாக வைத்திருப்பதாகவும், அதை கைவிட்டு பொதுமக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதை அவர் கொள்கையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.