Asianet News TamilAsianet News Tamil

'MLA for Sale' வீடியோ விவகாரம்... ஜூன் 19 விசாரிக்கப்படும்" - உயர்நீதிமன்றம்

HC investigates MLA for sale video on june 19
HC investigates MLA for sale video on june 19
Author
First Published Jun 16, 2017, 3:37 PM IST


அதிமுக எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என ஸ்டாலின் தொடுத்த மனு மீதான விசாரணையை ஜூன் 19 ஆம் தேதி நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் இடையே எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் பேசுவதில் பெரிய போர்களமே நடைபெற்று வந்தது.

எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் கொண்டு சென்று ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். அதில்12எம்.எல்.ஏக்கள் தப்பித்து வந்து ஒ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்தனர்.

அப்போது முதல் ஆளாக வெளியே வந்தவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ஆவார். ஆனால் தற்போது எம்.எல்.ஏக்களை இழுப்பதில் குதிரை பேரம் நடைபெற்றதாக அவர் பேசிய வீடியோ வெளியே வைரலாகி உள்ளது.

அதில், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்வதாகவும், அரசியல்னா அப்டிதான் இருக்கும் எனவும் சரவணன் கூறியுள்ளார்.

HC investigates MLA for sale video on june 19

மேலும் எனக்கு 500 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது எனவும் ஒ.பி.எஸ் அணி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தமிழகத்தில் பெரும் பிரளையத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சரவணனிடம் கேட்கையில், அந்த வீடியோவில் இருப்பது நான் தான் எனவும் அனால் அதில் வரும் குரல் என்னுடையது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வீடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கபட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதனால் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேச சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதைதொடர்ந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் ஸ்டாலின் அளித்த மனு மீதான விசாரணை திங்களன்று நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த விசாரணைக்கு பிறகு நோட்டீஸ் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios