தமிழகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றப்பணிகள் சுனக்கம் ஏற்படலாம். ஆனாலும் நீதிபதிகள் காணொலிக்காட்சி மூலம் தங்களது வீடுகளில் இருந்தே வழக்குகளை நடத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து நீதிமன்றங்கள் மூடப்பட்டன. முக்கிய வழக்குகள் மட்டும், நீதிபதிகள் வீடுகளில் இருந்தே காணொலி காட்சி மூலமாக விசாரித்து வந்தனர். ஆனால் ஜூன் 1 தளர்வுக்குப் பிறகு நீதிபதிகள் தங்கள் அறைகளில் காணொலி காட்சிகள் மூலமாக விசாரித்து வந்தனர்.இந்த வார இறுதியில் தாலுகா நீதிமன்றங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆஷா அனிதாசுமந்த் வேலுமணி ஆகிய 3பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் உள்பட நீதிமன்ற பணியாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே ரெம்பவும் முக்கியமான வழக்குகளை காணொலிக்காட்சி மூலம் விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.