Asianet News TamilAsianet News Tamil

டுவிட்டரில் தற்போது  டாப் டிரென்டிங்கில் உள்ள ஹேஷ்டேக்  என்ன தெரியுமா ? தமிழ்நாட்டு மானம் காத்துல பறக்குது !!

hashtag tredning in india is encounter edappadi
hashtag tredning in india is encounter edappadi
Author
First Published May 25, 2018, 7:13 AM IST


தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தால் தமிழகமே கொதித்தெழுந்துள்ள நிலையில், ட்விட்டரில் #EncounterEdappadi என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்கில் இருந்து வருகிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் பெரும்  கலவரமாக மாறியது.  கசலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதாகக் கூறி போலீசார் கண்மூடித்தனமாக சுட்டதில் 13 பேர்  கொல்லப்பட்டுள்ளனர். 

hashtag tredning in india is encounter edappadi

துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் பாஜக, அதிமுக தவிர அனைத்துக் கட்சிகளும்  பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். 

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

hashtag tredning in india is encounter edappadi

கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள் போன்றவை இயங்காத நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய சேவை  5 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துககுடி துப்பாக்கி சூடு தொடர்பான  செய்திகள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன. அதனடிப்படையில் #EncounterEdappadi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் பயன்பாட்டில் இந்தியளவில் டாப் டிரென்டிங்கில் இருந்து வருகிறது. 

hashtag tredning in india is encounter edappadi

இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு மக்கள் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த டுவிட்டர் பதிவுகள் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொது மக்கள் தங்கள் வெறுப்பை காட்டி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios