இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’ஈ.வெ.ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். சனியன் தமிழ் வேண்டாம் என்றார். திருக்குறளை தங்கத்தட்டில் உள்ள மலம் என்று அருவருக்கத்தக்க முறையில் விமரிசித்தார். தமிழ் மற்றும் திருவள்ளுவரை மதிப்பாதாக இருந்தால் ஈ.வெ.ரா வை ஏற்க மாட்டோம் என திக- திமுக, கம்யூனிஸ்ட்கள் அறிவிக்க வேண்டும்.

நேற்று தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை தீயசக்திகளால் அசிங்ஙப்படுத்தப் பட்டது. ஆனால் அந்த தீய சக்திகளை காவல்துறை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது. முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதியில் தரிசனம் செய்தார் என்று அவரது படங்களில் திக, திமுக சாணி அடித்தனர்.

 

ஸ்ரீ ரங்கம் கோவிலில் நடைபெறும் ஊழல்கள் குறித்து குரல் கொடுத்துவரும் ரங்கராஜன் மீது ஊழல் துறையின் அதிகாரி அளித்த பொய் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாளை நீதிபதி மகாதேவன் அவர்கள் முன்வரும் வழக்கில் அவர் ஆஜராவதை தடுக்கும் முயற்சியே இது’’என அவர் தெரிவித்துள்ளார்.