h raja teased astrologer sasikala and dinakaran
ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், இளவரசியின் மகன் விவேக் வீடு, மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணைவீடு, மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு, அவரது பண்ணை வீடு, திவாகரனின் நண்பர்கள், ஓட்டுநரின் வீடு, சசிகலாவின் வழக்கறிஞர் வீடு, ஜோதிடர் வீடு என சசிகலாவுடன் தொடர்புடைய அனைத்து வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரிசோதனை நடந்துவருகிறது.
தினகரன் குடும்பத்தினருக்கு ஆஸ்தான ஜோதிடர் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடத்திவருகிறது. கடலூரில் உள்ள சந்திரசேகர் என்பவர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆஸ்தான ஜோதிடர்.
சசிகலா தொடர்புடைய அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்திவரும் வருமான வரித்துறை, அந்த ஜோதிடரையும் விட்டுவைக்கவில்லை.
இந்நிலையில், ஜோதிடர் வீட்டில் நடந்துவரும் வருமான வரி சோதனை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிண்டலடித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று தெரியாத ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்று இப்போதாவது புரிந்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.
தினகரனையும் ஜோதிடரையும் கிண்டலடிக்கும் வகையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் எச்.ராஜா.
