தமிழக பாஜக தலைவர் தமிழிசை தலைமையில் அஜீத் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பாஜகவில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, சினிமா துறையில் நேர்மையானவர் அஜீத் . தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காகச் செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள்.அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளனர் எனக் கூறியிருந்தார்.

இந்த அரசியல் கருத்து தொடர்பாக  அறிக்கை வெளியிட்ட  அஜீத், என்னையும், என் ரசிகர்கள் பெயரையும் பயன்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் என் ரசிகர்களைக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளியுங்கள். வாக்களியுங்கள் என்று நிர்பந்திப்பதும் இல்லை என்று கூறியிருந்தார். அஜீத்தின் இந்த பதில் அறிக்கை தமிழிசைக்கு அரசியலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்திருந்தது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சென்னை மாதவரத்தில் திருமண விழா ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிஜேபி நடிகர் அஜித்துக்கு நூல் விட்டதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, நடிகர் அஜித்திற்கு நூலும் விடவில்லை. கயிறும் விடவில்லை எங்களுக்கு அப்படி ஒரு அவசியமும் இல்லை என  நக்கலடித்துள்ளது அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.