மதுரையில் வைகை நதியின் புனிதம் காக்கும் பொருட்டு வைகை பெருவிழா ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கமும், மதுரை மக்களும் இணைந்து, முதல் முறையாக இந்த வைகை பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.  வைகை ஆற்றை பாதுகாத்தல், விவசாயத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளை வலியுத்தி இந்த பெருவிழா நடத்தப்பட்டு வருதாக இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் மதுரை வைகை கரை அருகே, புட்டுதோப்பில் நடைபெற்ற பசு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா , தான் மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்ததாகவும், தானே பால் கறந்து விற்பனை செய்து அதில் வரும்  பணத்தில்தான்   படித்தாகவும் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் ரீல் லைஃப்பில் அண்ணாமலை என்றால் நான் ரியல் லைஃப்பில் அண்ணாமலை என தெரிவித்தார். 


 
இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் சொல்லி இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமையே பறிப்பதை மோடி தலைமையிலான அரசு தடுத்திருப்பதாக தெரிவித்தார்.  முத்தலாக் தடுப்பு சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் பெண் அடிமை தனத்தை போற்றுகின்ற கட்சிகள் எனவும் எச்.ராஜா கூறினார்.

என்.ஐ.ஏவை பலப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பயங்கரவாத தேச துரோகிகள் எனவுத் எச்,ராஜா  விமர்சனம் செய்தார்.