கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் பெண் சிங்கங்கள் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைவர் வேல்முருகன் தலைமையில் வெற்றிவேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி யாத்திரைச் சென்றதாக வேல்முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்

.

இந்நிலையில், விழுப்புரத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையின் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும், தைரியசாலிகளாக உள்ளனர். ஆன்மிகத்தைக் கடைபிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள் எனக்கூறினார்.