Asianet News TamilAsianet News Tamil

H.ராஜா - ஆளுநர் திடீர் சந்திப்பு! சென்னையில் பரபரப்பு...

கோர்ட் - போலிஸ் ஆகியோரை கன்னாபின்னாவென  வாய்க்கு வந்த மாதிரி  ஒருமையில் பேசி வந்த தேசிய தலைவர் ஹெச்.ராஜா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார்.

H.Raja meet governor Banwarilal Purohit
Author
Chennai, First Published Sep 25, 2018, 2:29 PM IST

விநாயகர் ஊர்வலம் செல்ல முயன்றபோது, உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததால். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா போலீசாருடன் கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஹெச்.ராஜா, போலீசாருடன் நடத்திய  வாக்குவாதத்தில், போலீசார் மற்றும் நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக  நீதிமன்றத்தையும் காவலர்களையும் தரக்குறைவாக விமர்சித்த பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது பல்வேறு தரப்பினர் கண்டனக் குரல்கள் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து தாமாகவே முன் வந்த வழக்கறிஞர்கள் வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கரின்ஞர்கள்  முறையிட்டிருந்தார்கள். 

"

இதனையடுத்து சிதம்பரம் பகுதி திமுக நிர்வாகி மற்றும் அதிமுக எம்.பி என நாளுக்கு நாள் ராஜா மீது வழக்குகள் குவிந்து வருகிறது. இந்த நிலையை சமாளிக்க  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகைக்கு சென்று சந்தித்துள்ளார். சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. 

ஆனால், கருணாஸ் கைது செய்ததை அடுத்து நீதி மன்றத்தையும், காவலர்களையும் கடுமையாக விமர்சித்த தன்னையும் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்திலும் தனக்கு எதிராக குவியும் வழக்குகளை சமாளிக்கவும் ஆளுனரை சந்தித்ததாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios