திராவிட அரசியல் என்றால் என்னவென்று பட்டியலிட்டு ட்விட்டரில் வரிசைப்படுத்தியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா.
தமிழகத்தில் திராவிட அரசியல், பெரியார் மண் என்று முன்னெடுக்கப்படும் திமுக அரசியல் நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இந்த நிலையில் எவையெல்லாம் திராவிட அரசியல் என்று ஹெச். ராஜா பட்டியலிட்டுள்ளார். திமுகவை விமர்சனம் செய்யும் வகையில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஹெச். ராஜா.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்தப் பட்டியல்கள்: 
* சாராய ஆலையை நடத்தியபடியே, 'டாஸ்மாக்'கை மூடச் சொல்வது.
* இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளி நடத்திகொண்டு, இந்தியை எதிர்ப்பது.
* கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தரவில்லையென போராட்டம் நடத்தியபடியே, ஜோலார்பேட்டை தண்ணீரை சென்னைக்கு தர மாட்டேன் என அறிவிப்பது. 
* தன் பிள்ளைகளை பல லட்சம் ரூபாய் கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து, அதே கல்வியைக் கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும், 'நவோதயா'வை எதிர்ப்பது.
* இந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, பிற மதக் கூட்டங்களில் பங்கேற்பது.
* கோடிக்கணக்கான ரூபாய் குவித்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான் திராவிட அரசியல்.
ட்விட்டரில் ஹெச்.ராஜா பதிவிட்டுள்ள இந்தப் பட்டியல்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து கூறிவருகிறார்கள்.