இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ’’சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர், டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய வன்முறையாளர், இன்று ஜே.என்.யூ., வில் இடது சாரிகளின் முகமூடி வன்முறைக்கு முதலைக் கண்ணீர்.

முகிலனை காவல்துறை கடத்தியது என்று தேசவிரோத கும்பல் போட்ட நாடகம் போன்றதே இப் புலம்பலும். பாரதத்தை துண்டாடுவோம் என்று கொக்கரித்தவரகள் போடும் நாடகம். செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் கட்ட வந்த மாணவர்களை முகமூடி அணிந்த இடதுசாரிகள் தாக்கிவிட்டு ஒப்பாரி வேறா?

இடதுசாரிகள் ஜே.என்.யூ வில் நடத்திய முகமூடி நாடகத்தை நம்பி தமிழக மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 1964-67 காலகட்டத்தில் திக& திமுக இந்தி எதிர்ப்பு நாடகத்தை மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சி.பி.எஸ்.இ.பள்ளி முதலாளிகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.