ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவருக்கு ஐந்தாவது முறையாக சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டு டெல்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவரது சிபிஐ காவல் முடிந்த நிலையில் அவருக்கு முன் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா வைத்த எச்சரிக்கை பேச்சு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் அந்த பேட்டியில், சிதம்பரம் மிகப்பெரிய ஊழல்வாதி என்பதைக் கடந்த 25 வருடங்களாக சிவகங்கை முழுவதும் சொல்லிவருகிறேன். ஏனெனில், அவரைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தால் எதிர்க்கக் கூடாது. ஏனெனில், அவர்கள் ஜனநாயக விரோதிகள்.

உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆகணும். ஊழல் செய்தால் ஜெயிலுக்குத் தான் போகணும். ஆனால், சிதம்பரம் திஹார்க்கு செல்ல மறுக்கிறாராம். சிதம்பரத்துக்கு நடந்தது போல எதிர்க்கட்சித் தலைவருக்கும் இதே நிலை ஏற்படும் என்று சொல்லிவிட யார் அந்த எதிர்க்கட்சித் தலைவர்? என்று கேள்வி எழுப்ப, உடனே காங்கிரஸ் கூடத் தான் எதிர்க்கட்சி என மழுப்பாமல் குழப்பிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு நடையைக்கட்டினார். ஆனால், அவர் ஸ்டாலினை மனத்தில் வைத்தே சொன்னது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான் .

ஸ்டாலினின் இமேஜை டேமேஜ் செய்ய அவரை கைது செய்ய வேண்டும் என்பதும்  டெல்லியின் பிளான், அடுத்த பிளான் ஸ்டாலினுக்கு எதிராக ரஜினியை களமிறக்குவது. அக்டோபரில் ஹரியானா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில தேர்தல்கள் நடக்கஉள்ள நிலையில், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின் அமித் ஷாவின் கவனம் திமுக மீது, குறிப்பாக ஸ்டாலின் மீது திரும்பக் கூடும் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பிஜேபியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் சொல்லிவிடவே அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.