h raja criticize tamilnadu government and dravidian parties
திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்தின் எழுச்சி இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகி நீலகண்ட பிரமச்சாரியின் 128வது ஜெயந்திவிழா கடலூர் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எருக்கூரில் அவர் வாழ்ந்த வீட்டில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, அவரது படத்திற்கு எச்.ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தமிழக அரசையும் திராவிட கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்தின் எழுச்சி இருக்கிறது.

எனவே அதை உணர்ந்து ஆர்.கே.நகரில் திமுக, அதிமுகவை புறக்கணித்து, மக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
