h raja continuously made mistakes in his tweets

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கொள்கை ரீதியாக முரண்படுபவர்களை, தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சாடிவருகிறார். அவ்வாறு சாடும் அவர், பெரும்பாலும் குறில், நெடில் பிழைகளுடன் தான் டுவிட்டர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

மெர்சல் பட விவகாரத்தின்போது, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது பராசக்தி திரைப்படம் வெளியாகியிருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்குப் பதிலளிக்கும் வகையில், டுவிட்டரில் பதிவிட்டிருந்த எச்.ராஜா, கோவில் என்பதற்குப் பதிலாக ”கேவில்” என எழுதியிருந்தார். 

அதேபோல, தற்போது கட்டாதே என்பதற்குப் பதிலாக காட்டாதே என எச்.ராஜா பதிவிட்டுள்ளார். மெர்சல் படத்தில் வசனத்தையும், விஜயின் தந்தை சந்திரசேகரின் கருத்தையும் விமர்சித்து இந்துக்களை விழித்துக்கொள்ள வலியுறுத்தும் விதமாக ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில், கோவில் கட்டாதே என குறிப்பிடுவதற்குப் பதிலாக கோவில் காட்டாதே என பதிவிட்டுள்ளார்.

குறில், நெடில் வித்தியாசத்தில் வாசகத்தின் ஒட்டுமொத்த அர்த்தமே கூட மாறிவிடும் என்பதை உணர்ந்து, இனிமேல் இந்துக்களுக்கு விடுக்கும் அறிவுரையோ அல்லது மாற்று சிந்தனையாளர்களின் மீதான விமர்சனமோ பிழையில்லாமல் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.