சாராயக்கடைகளை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச்சொல்வதும், இந்தியைச் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்தான் திராவிட அரசியல் என பாஜக தேசியச்செயலாளர்  எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திமுக மற்றும் பாஜகாவிடையே சமீபகாலமாக  கருத்து மோதல் அதிகமாகிக்கொண்டே வருகிறது , சில நேரங்களில்  வரம்பு மீறி ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொள்வதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது. பாஜக மதவாதி கட்சி என்று திமுகவும்,  திமுக தேசவிரோதே சக்தி  என பாஜகவும்  நாளொன்றுக்கு குறைந்தது நூறுமுறையாவது விமர்சித்துக்கொள்கின்றனர். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் மாறி மாறி புது புது விமர்சனங்களை அவர்கள் முன்வைத்து வருவதுதான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டு . இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து  கடந்த 22 ஆம் தேதி டெல்லியில்  திமுக தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்றது, இதில் திமுகமீது உச்ச கோபத்தில் உள்ள பாஜக  திமுகாவை கடுமையாகதாக்கத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு துணை போகும் திமுக,  திமுகவை விசாரித்தால் தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் யாரென்பது தெரிந்துவிடும், என்பது போன்ற விமர்சனங்களை சமூக வளைதளங்களில் பதிவிட்டு தாக்கி வருகின்றனர். இந்நிலையில் திமுக மற்றும் திராவிட அரசியலை விமர்சித்து  பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா   டுவிட்டரில் கருத்து ஒன்று  பதிவு செய்துள்ளார். அந்த கருத்து மீண்டு இரு கட்சியனரிடையே கருத்து மோதலை தூண்டும் வகையில் அவரின் கருத்து அமைந்துள்ளது.

அதாவது,  “ திராவிட அரசியல் என்பது... சாராயக்கடை ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச்சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும் தான்” என அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.   இந்தி திணிப்பு கூடாது, டாஸ்மாக் கூடாது, என பேசிவரும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக விமர்சிக்கும் பதிவுதான் இது என தெரிகிறது.  ஸ்டாலினை மட்டும் அல்லாது அதிமுக, திமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளின் அரசியலையும் நக்கலடிக்கும் பதிவு  எனவும் கூறப்படுகிறது,  அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது.