Asianet News TamilAsianet News Tamil

பெரியார் முதல் அறிவாலயம் வரை.. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வம்புக்கு இழுத்த துக்ளக் குருமூர்த்தி.!!

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பாஜக கட்சிக்கு நெருக்கமானவர் ஆவார். இவர் அடிக்கடி பல சர்ச்சைகள் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவது உண்டு. இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Gurumurthy lashed out at the DMK and its allies-rag
Author
First Published Nov 11, 2023, 5:26 PM IST | Last Updated Nov 11, 2023, 5:31 PM IST

இந்த நிலையில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளை பற்றி பெரியார் கூறியதை, அண்ணாமலை கூறியது போல அந்தந்த கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் வைத்தால் எப்படி இருக்கும் என பத்திரிக்கையாளர் ஒருவர் தனது வாட்ஸ் அப் எண்ணுக்கு 3 புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக கூறி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈவேரா திமுக பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல திமுக அலுவலகத்தில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப்.

மற்றொரு பதிவில், ஈவேரா காங்கிரஸ் பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல சத்தியமூர்த்தி பவனில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப் என்று வெளியிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ஈவேரா கம்யூனிஸ்டு பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப்” என்று குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

முக்நூலில் வந்ததாக ஒருவர் எனக்கு அனுப்பியது. ஈவேரா சிந்தனைகள் காலாவதியாகிவிட்டது என்பதை அவர் சீடர் குடும்பத்தில் இருந்தே உதாரணம் காட்டும் சித்திரம். ஈவேரா சீடர்கள் சிந்திக்கவேண்டும். செய்வார்களா? குருமூர்த்தி வெளியிட்டுள்ள இந்த பதிவு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios