தமிழக துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினரை ஆண்மையற்றவர்கள் என பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.

முதலமைச்சர் எடப்பாடி பழடினிசாமியோ அல்லது துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சோ இதுவரை பதில் அளிக்கவில்லை. ஆனால் அமைச்சர் ஜெயகுமார் மட்டும் , குருமூர்த்தியின் பேச்சு ஆணவம், திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; பொதுவாக நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு. அது அனைவருக்கும் தெரியும்” என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில், சோ போல தன்னை குருமூர்த்தி நினைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் நான்காம் தரத்தில் பேசினால் அவரை எதிர்த்து நாற்பதாம் தரத்தில் பேச அதிமுகவில் ஆள் பஞ்சம் கிடையாது என்றும் கடுமையாக கண்டித்திருந்தது.

இந்நிலையில் துக்ளக் இதழின் தலையங்கத்தில், ‘மிரட்டல் பலிக்காது’ என்ற தலைப்பில் இந்த விவகாரம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அதில் அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையில் நம்மை மிரட்டியிருக்கிறார்கள். மிரளுகிறவர்களைத்தான் மிரட்ட முடியும். 

சர்வாதிகாரியான இந்திரா காந்தி, கருணாநிதி தலைமையிலான திமுக, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, நாடே அஞ்சிய பயங்கரவாத எல்.டி.டி.இ. கூட துக்ளக்கை மிரட்டவோ, பயமுறுத்தவோ முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாக பிளவுபட்டிருந்த  அதிமுக ஒன்றுபட உதவிய இன்றைய துக்ளக் ஆசிரியருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நன்றி கூறினர். 

ஆனால் , துக்ளக்கிற்கும், அதிமுக இணைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசத் தொடங்கியிருப்பதால்தான். இவற்றை எல்லாம் நினைவில் கொண்டு வினாசகாலே விபரீத புத்தி என்று ஆகாமல் அதிமுக தலைவர்கள் நடந்துகொள்வது நல்லது”  என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.