Gun protection for deputy tahsildar thuthukudi
தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது அங்கு பணியில் இருந்த துணை வட்டாட்சியர்கள், கண்ணன், சேகர், ஆகியோர் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துணை வட்டாட்சியர் கண்ணன், கயத்தார் துணை வட்டாட்சியராகவும், மற்றொரு தனித்துணை வட்டாட்சியரான சேகர், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தாசில்தார் சந்திரன் துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் 6 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இரண்டாவது நாள் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட கோட்ட கலால் அலுவலர் எஸ்.சந்திரன், தூத்துக்குடி, நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, இருவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
