Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் பிரதமர் ஆகாட்டியும் பரவாயில்ல ! மோடி பிரதமர் ஆகக் கூடாது என துணிந்த காங்கிரஸ் !!

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றாலும்  பரவாயில்லை, மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு வரவிட மாட்டோம் என குலாம் நபி ஆசாத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

gulam nabi azad  talk about ragul
Author
Delhi, First Published May 16, 2019, 10:44 PM IST

17 ஆவது மக்களைவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7 ஆவது கட்டத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி என அக்கட்சி அறிவித்துள்ளது. ஆனால்  காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ராகுல் காந்தியை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்த போதும் காங்கிரஸ் மவுனமாகவே இருந்தது.தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றே கூறியது.

gulam nabi azad  talk about ragul

இந்நிலையில், தங்கள் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பாஜக மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்பதுதான் தங்களின் ஒரே நோக்கம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். 

பீகார் மாநிலம் பாட்னாவில் பேசிய அவர், தேர்தல் முடிவுகளுக்குப் பின் எதிர்க்கட்சிகள் கருத்தொற்றுமையுடன் தங்களுக்கு ஆதரவளித்தால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.

gulam nabi azad  talk about ragul

காங்கிரசுக்கு பிரதமர் பதவிக்கு கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டாலும் அதை தாங்கள் ஒரு பிரச்னையாக்க மாட்டோம் என்றும், பாஜகவை தடுப்பதே தங்களின் பிரதான நோக்கம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

gulam nabi azad  talk about ragul

எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்கத் தயாரா என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடுத்திருந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள காங்கிரஸ், அதில் பங்கேற்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பாஜக அணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios