குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தற்போது மாதாந்திர ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்ட மசோதா நேற்று  நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குஜராத் சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானம் ரூ..45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி.70,727  ரூபாயாக  இருந்த எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது 1,16,316  ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.45,589 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்களின் தினசரி படி ரூ.200 லிருந்து ரூ.1000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது வேறயா ?

அண்மையில் தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது