பாஜக ஆட்சியில் உணவு பொருட்களின் விலை பாதியாக குறைந்துள்ளது என எச்.ராஜா கூறியுள்ளார். சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டப்பணிக்கு தேவையான நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதன்படி சேலம் மாவட்டத்தில் அரியானூர், பூலாவரி, நிலவாரப்பட்டி, உடையாப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, சுக்கம்பட்டி, வெள்ளியம்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர் வரை இந்த சாலை பணிக்கு நில அளவீடு நிறைவு பெற்றுள்ளது. சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.

பாஜக ஆட்சியில் உணவு பொருட்களின் விலை பாதியாக குறைந்துள்ளது என்றார். மேலும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு தயார், ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என எச்.ராஜா கூறியுள்ளார்.