இந்திய மக்கள் அவர்கள் இடத்தில் வசிக்க உரிமையுள்ளது. 2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிகளை வரவேற்கிறோம்.

பாஜகவின் கருவியாக ஆளுநரும் அவர்களிட் அலுவலகமாக நாடு முழுவதும் ராஜ்பவன் மாறிவருகிறது என கேரளா மாநில அரசின் முன்னாள் வனத்துறை அமைச்சர் பினாய் விஸ்வம் குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசு மக்களுக்கானது இல்லை அது அவதானிக்கும் அம்பானிக்கும்மான அரசாக உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான பினாய் விஸ்வம் எம்பி மற்றும் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பனாய் விஸ்வம் பேசியதாவது:- பேராசை என்பது மோடி அரசின் புதிய மதமாக மாறியுள்ளது. அதில் மோடியும் அவரது நிறுவனமும் லாபம் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதன்காக நாடு முழுவதும் வகுப்புவாதத்தை, பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

அமித்ஷாவின் புதுச்சேரி உரையை முழுவதுமாக கேட்டேன். அவரின் முழு உரையும் ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற நோக்கத்தை கொண்டுள்ளது. தனது பேச்சுக்காக அமித்ஷா மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். 2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்து போராட அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அந்தத் தேர்தல் போரில் கேரளா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு பெரிய பங்கு உள்ளது. பாஜக கையில் கருவியாக ஆளுநரும் அவர்களின் வசிப்பிடமாக ராஜ்பவனும் உள்ளது. நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் ராஜ்பவன் பாஜகவின் அலுவலகமாகவே மாறி வருகிறது.

தமிழ்நாட்டில் நடப்பதுதான் கேரளாவிலும் நடக்கிறது. ஆளுநர் பல்கலைக்கழகங்களில் தலையிடுகிறார்கள் இது கூட்டாட்சி தத்துவத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல் ஆகும். ஜஹாங்கீர்புரி சம்பவத்தில் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்ட போது நாங்கள் மக்களை சந்திக்க முயற்சித்தோம் ஆனால் போலீசார் எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். 100 கடைகள் புல்டோசர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை முழுவதும் நேரடியாக அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நாட்டு மக்களுக்கு இந்த நாட்டில் வாழ உரிமை உள்ளது.

இந்திய மக்கள் அவர்கள் இடத்தில் வசிக்க உரிமையுள்ளது. 2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிகளை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். அப்போது செய்தியாளரிடம் பேசிய முத்தரசன், தமிழகத்தில் போட்டி ஆட்சியை ஆளுநர் செய்துவருகிறார். தமிழகத்தில் கவர்னர் தலைமையில் மத்திய அரசு போட்டி ஆட்சி நடத்துகிறது . இவ்வாறு அவர் விமர்சித்தார்.