மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க கெடு? மசோதா குறித்து ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ஆளுநர் தமிழிசை
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் வேண்டும் என்று கூறுவது முதல்வர் ஸ்டாலினின் உரிமை. ஆனால், மசோதா குறித்து ஆலோசித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கோரிமேடு மதர்தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒய்-20 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணையிக்க வேண்டும் என முதலமைச்சர் கடிதம் எழுதுவது அவரது உரிமை.
நான் ஒரு மசோதாவை ஆளுநராகத் தான் பார்க்கின்றேன். என்னை பொருத்தவரை மசோதா வந்தால் கால நிர்ணையம் செய்து கலந்தாலோசித்து கால அவகாசம் எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக்கொள்வேன். சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது. ஆகவே தவறான முன் உதாரணமாக ஆகிவிடக்கூடாது. அலசி ஆராய்ந்து அதை பார்க்க வேண்டும்.
கள்ளக்காதல் விவகாரம்; கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் மனைவி 21 இடங்களில் குத்தி கொலை
சில மசோதாக்களுக்கு பொதுமக்களிடமிருந்து சில கோரிக்கைகள் வருகின்றன. எதிர்கட்சிகளிடம் இருந்து சில கோரிக்கைகள் வருகின்றன. இதை பார்த்துத்தான் செயல்படுகின்றேன். இது என்னோடு மாநிலத்தில் நான் பின்பற்றும் முறை. முதலமைச்சர் கடிதம் எழுதுகின்றார்கள். இதற்கு முன்பாக எதிர்கட்சியாக இருக்கும்போது அவர்கள் ஆளுநர்களை பார்த்தவர்கள். அப்போது கருத்து சொல்லவில்லை இப்போது பேசுகின்றார்கள்.
ஸ்மார்ட் சிட்டி குறித்து தவறான கருத்துக்கள் வெளியே கொண்டுவரப்படுகிறது. அதனை விரைவுப்படுத்தவது தொடர்பாககவும், வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கேள்விபட்டேன். அதற்காக சுகாதாரத்துறை செயலருடன் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும். எப்படி பணியாற்றுகிறார்கள், எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொண்டுவர வேண்டும் என்பது தொடர்பாகவும் கூட்டம் நடத்தியுள்ளோம்.
200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்த அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டி
மேலும் பயிர் காப்பீட்டு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறிய மாநிலங்கள் பிரிவில் புதுச்சேரிக்கு முதல் விருது கிடைத்துள்ளது. இதற்காக வேளாண் துறை அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். வரும் 25-ம் தேதி இங்குள்ள விவசாயிகள் பிரச்சைனை தொடர்பாக துணைநிலை ஆளுநர்களுக்கான கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. அதில் நான் கலந்து கொள்கிறேன். புதுச்சேரியில் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும். என்று தெரிவித்தார்.