200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்த அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலைய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் துவக்கி வைத்தார். இதில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், மதுரை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று மாடுகளை பிடித்து வருகின்றனர். இதில் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மது வாங்க செல்லும் போது பாதியில் பழுதான இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய குடிமகன்
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், டைனிங் டேபிள், குக்கர், டிவி, சைக்கிள், ஃபேன், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் முதல் உதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் மற்றும் அவசர உதவி வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.