ஸ்டாலின் கேள்விக்கு அதிரடி விளக்கம் கொடுத்த ஆளுநர் மாளிகை....!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின், மாவட்டம் தோறும் பயணம் குறித்து விமர்சனம் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்து உள்ளது ஆளுநர் மாளிகை.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் ஈடுபடுவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி திமுகவினர் பேரணியாக சென்றனர்.

பேரணியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தினர் காவல் துறையினர்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, தற்போது  செய்திக்குறிப்பை வெளியிட்டு உள்ளது

அதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பயணம் தொடரும் என்றும், மாவட்டம் தோறும் சென்று, மக்களின் பிரச்சனையை கேட்டறிந்து வருகிறார் ஆளுநர்...

எந்த அதிகாரிகளுக்கும் ஆளுநர் இதுவரை உத்தரவு பிறப்பித்தது இல்லை...

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மேற்கொண்டுள்ள பயணம் தொடரும்

மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆளுநர் செல்ல அதிகாரம் உள்ளது.

ஆளுநரின் வேலையை செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் சட்டம் உள்ளது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.