Asianet News TamilAsianet News Tamil

தமிழக ஆளுநர் ஆய்வு..? அன்று வந்ததும் இதே நிலா.. இன்று வந்ததும் அதே நிலா.. திமுகவை கிண்டலடிக்கும் பாஜக.!

அரசு துறைகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 4 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவை வைத்து பாஜக செய்தித்தொடர்பாளர் கிண்டலடித்துள்ளார்.
 

Governor of Tamil Nadu review..? The same moon when it came .. The same moon when it came today .. BJP teasing DMK.!
Author
Chennai, First Published Oct 26, 2021, 8:48 PM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் பொறுப்பேற்றார். புதுச்சேரியில் கிரண்பேடி ஆளுங்கட்சியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியதுபோல ஆர்.என்.ரவியும் இருப்பார் என்பது பாஜகவினரின் எண்ணம். ஆனால், அவர் பொறுப்பேற்றது முதலே ஆளுங்கட்சியுடன் இணக்கமாகவே செயல்படுவதாகவே கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை பிரதமர் மோடியைச் சந்தித்துபேசினார். இந்நிலையில் அதிமுக - பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ஆளுநர் ரவியை சந்தித்து, திமுக அரசு மீது புகார் வாசித்தனர்.Governor of Tamil Nadu review..? The same moon when it came .. The same moon when it came today .. BJP teasing DMK.!


இந்நிலையில் அக்டோபர் 30 அன்று அனைத்து துணைவேந்தர்களுடன் ஆளுநரும் வேந்தருமான ஆர்.என்.ரவி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் அரசு துறை செயலாளர்களுடனும் ஆளுநர் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறை செயலாளர்கள் தரவுகளுடன் தயாராக இருக்கும்படி தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதமும் பரபரப்பை ஏற்படுத்தியது. முந்தைய ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியபோது திமுக கடுமையாக எதிர்த்தது. ஆளுநருக்கு கறுப்புக் கொடியும் திமுகவினர் காட்டினர்.


இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று ஆளுநர் ஆய்வு குறித்து இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவை வெளியிட்டு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கிண்டலடித்துள்ளார். அப்போது ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “மாநில உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் மத்திய பாஜக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழக ஆளுநர் கோவையில் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டிருப்பது சட்ட விரோத முயற்சி. ‘பொம்மை அரசை’ வைத்துக்கொண்டு ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்திடலாம் என்ற பாஜகவின்  திட்டம் இதன்மூலம் உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

Governor of Tamil Nadu review..? The same moon when it came .. The same moon when it came today .. BJP teasing DMK.!
இதில், ‘பொம்மை அரசு’ என்று கூறியதை வைத்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “ நானும் பொம்மை நீயும் பொம்மை. அன்று வந்ததும் இதே நிலா. இன்று வந்ததும் அதே நிலா. என்றும் உள்ளது ஒரே நிலா. இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா?” என்று கிண்டலடித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios