மாநில முதலமைச்சர்கள் சட்டத்தை மீறும் போது அதை தடுக்கலாமே ஒழிய, ஆனால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் கொண்டுவரும் சட்டங்களை ஒருபோதும் ஆளுநரால் தடுக்க முடியாது என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார்.
மாநில முதலமைச்சர்கள் சட்டத்தை மீறும் போது அதை தடுக்கலாமே ஒழிய, ஆனால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் கொண்டுவரும் சட்டங்களை ஒருபோதும் ஆளுநரால் தடுக்க முடியாது என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார்.
தமிழக அரசு கொண்டு வரும் பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், முன்னாள் ஆளுநர் சதாசிவம் இவ்வாறு கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஈரோடு கேரள சமாஜத்தின் 75வது ஆண்டு பவள விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அளுநர் ப. சதாசிவம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இதையும் படியுங்கள் : வனப்பகுதியை விரிவுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க கேரள மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டேன். அந்த பதவியில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன், 2019 இல் ஓய்வு பெற்று என் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். நான் கேரள மாநிலத்தின் ஆளுநராக இருக்கும்போது அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி முதலமைச்சராக இருந்தார்.
இதையும் படியுங்கள் : ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை.. திருப்பி அடித்த பாஜக அமைப்பு செயலாளர் பி.எல் சந்தோஷ்.
அதன்பிறகு அம்மாநிலத்தில் முதலமைச்சராக பினராயி விஜயன் பொறுப்பேற்றார், அந்த 2 முதல் அமைச்சர்களுடனும் நான் இணக்கமாக செயல்பட்டிருக்கிறேன். அவர்களின் குடும்ப நண்பராகவும் இருந்திருக்கிறேன், அவர்களின் இல்லங்களுக்கு சென்று விழுந்து சாப்பிடும் அளவுக்கு உறவு வைத்திருந்தேன்.

அப்போதுகூட பல்கலைக்கழக விவகாரங்களில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றினேன், சிறந்த 5 பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர்கள் கையால் 5 கோடி ரூபாய் சிறப்பு பரிசு வழங்க வைத்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சட்டத்தை மீறும் போது அதைத் தடுக்கலாமே ஒழிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காக கொண்டுவரும் சட்டங்களை ஆளுநரால் ஒருபோதும் தடுக்க முடியாது.

ஆளுநராக நான் இருந்த போதே மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட்டிருக்கிறேன், என்னுடைய செயல்பாடுகளைப் பார்த்து மத்திய அரசு எல்லா மாநிலங்களிலும் இதே போன்று அனைவரும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனக்கு மலையாள நண்பர்கள் நெருங்கிய தொடர்பு உண்டு, உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் நான் நீதிபதியாக இருந்தபோது எனக்கு பாதுகாப்பு வழங்கியவர்கள் மலையாளிகள் தான் இவ்வாறு அவர் கூறினார்.
