நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது..! விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்புவார். தெறிக்கவிடும் மா.சு.
இன்று 11 பெண்களை மேயராக்கி அதை முதலமைச்சர் ஸ்டாலின் மெய்ப்பித்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் கடன் மற்றும் இலவச பேருந்து சலுகை என திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஏராளமான திட்டங்கள் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள நீட் மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது என்றும், விரைவில் அவர் குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பு நடவடிக்கை எடுப்பார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி நீட் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ள நிலையில் மா.சு இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு விமர்சனங்களும் அரசுக்கு எதிராக உள்ளது, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக கொடுத்த வாக்குறுதி தற்போது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தைக் கூட்டி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இதையும் படியுங்கள்: வழக்குமேல் வழக்கு.. சிக்கி சின்னாபின்னமாகும் ஜெயக்குமார்.. ஜாமின் பெற போராடும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு.
ஆனால் பல வாரங்களாக அத் தீர்மானத்தில் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், திமுக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால் அம்மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த மசோதா மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வருகிறார். ஆளுநர் அதை பல மாதங்களுக்கு கிடப்பில் போடவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆளுநர் இந்த முறை கட்டாயம் அம்மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தே ஆகவேண்டும் என்றும், திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இந்திய நாடு போல வேறு எந்த நாடும் மாணவர்களை உக்ரேனில் இருந்து மீட்டுவரவில்லை. மார்தட்டும் ஜி.கே வாசன்.
இந்நிலையில் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியாது, விரைவில் குடியரசு தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை தி நகரில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார் மேலும் அவர் பேசியிருப்பதாவது, முத்தமிழறிஞர் கலைஞர்தான் பெண்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தினார். திருமண நிதிஉதவி, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு போன்றவற்றை முதலில் அமல்படுத்தினார். மேலும் மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதும் கலைஞர் கருணாநிதிதான். 21 மாநகராட்சியில் 11 மாநகராட்சிகளில் இன்று பெண்கள் மேயராக வரக்காரணமாக இருந்தவர் கருணாநிதிதான்.
இன்று 11 பெண்களை மேயராக்கி அதை முதலமைச்சர் ஸ்டாலின் மெய்ப்பித்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் கடன் மற்றும் இலவச பேருந்து சலுகை என திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஏராளமான திட்டங்கள் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்களுக்கு எதிர்காலத்தில் பணியிடங்கள் நிரப்பப் படும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். நீட் மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மீண்டும் ஆளுநரால் மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது, விரைவில் குடியரசுத் தலைவருக்கு அவர் அதை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.