Asianet News TamilAsianet News Tamil

அரசுபள்ளி பெருமையின் அடையாளமாக மாறும்... அன்பில் மகேஷ் நம்பிக்கை..!

பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓடவேண்டி உள்ளது.

Government school will become a symbol of pride ... Mahesh hopes
Author
Tamil Nadu, First Published Oct 26, 2021, 12:22 PM IST

அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளகமாக மாற்ற நாம் உழைக்க வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Government school will become a symbol of pride ... Mahesh hopes
 
சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், தனியார் பங்களிப்புடன் மாண்டிசோரி பள்ளித் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள் இன்று அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம்.

மாநிலத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையே உள்ளது. இந்நிலையை வகையில் இன்று அரசுப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.Government school will become a symbol of pride ... Mahesh hopes

அரசுப்பள்ளிதானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது. அரசுப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓடவேண்டி உள்ளது. அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்று மாற்றிக்காட்ட உழைத்துவருகிறோம்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்துக்கு இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் தன்னார்வலர்களாக பதிவு செய்ய முன்வர வேண்டும்.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios