அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அதற்கான அரசாணை தயாரிக்கும் பணியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மும்முரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி, மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தது காவேரி மருத்துவமனை. 

திமுகவினரின் கோரிக்கையை ஏற்று அண்ணா  நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்ய தமிழக அரசு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், அதற்கான அரசாணையை தயார் செய்யும் பணியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.