Asianet News TamilAsianet News Tamil

தாழ்த்தப்பட்ட சாதியினரை திருமணம் செய்தால் அரசு வேலை... விசிக தேர்தல் அறிக்கை..!

சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என விசிக தேர்தல் அறிக்கையில் கூறப்படுள்ளது. 

Government job if married to oppressed castes ... VCK election statement
Author
Tamil Nadu, First Published Mar 25, 2021, 12:13 PM IST

சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என விசிக தேர்தல் அறிக்கையில் கூறப்படுள்ளது. Government job if married to oppressed castes ... VCK election statement

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘’மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை   உறுதிப்படுத்த, சட்டமியற்றும் அவைகளில் 50 விழுக்காடு பிரதிதிநித்துவம் அளிக்கும் வகையிலான இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர, பெண்ணியவாதிகள் உள்ளிட்ட அனைத்து சனநாயக சக்திகளோடு ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவோம். மனித கழிவை மனிதனே அள்ளும் முறையை ஒழிக்க பாடுபடுவோம் சாதியின் பெயரால் மற்றும் மதத்தின் பெயரால் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலையும் அதனடிப்படையிலான சமூகப்பிரிவினைப் போக்குகளையும் தடுத்திட அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அணியப்படுத்துவோம்Government job if married to oppressed castes ... VCK election statement

கிராமங்கள்தோறும் பொது மயானங்கள் அமைத்திட விசிக முயற்சி எடுக்கும். சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம். இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழிக்க தனியார்மய படுத்துவதை ஊக்குவிக்கும் பாசிச பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புக்களின் நடவடிக்கைகள் தடுப்போம். மொழிவழி தேசியம், மாநில உரிமைகள், மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை பாதுகாத்து அரசியலமைப்பு சட்டம் முன்மொழியும் கூட்டாசி முறையைப் பாதுகாப்போம்’’எனக் கூறப்பட்டுள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios