தமிழக அரசியலின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. 95 வயதான இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். கட்சி, இயக்கம் கடந்து அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக நல்லகண்ணு விளங்கி வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராகவும் தேசிய அளவில் பல பொறுப்புகளையும் நல்லகண்ணு வகித்திருக்கிறார்.

கடந்த 2004 ம் ஆண்டு முதல் சென்னை தியாகராஜநாகரில் இருக்கும் தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நல்லகண்ணு வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அங்கு புதிய கட்டுமானப்பணிகள் நடக்க இருப்பதாக கூறி அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் நல்லகண்ணுவும், அதே குடியிருப்பில் வசித்து வந்த கக்கன் மகனும் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இது தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு தரப்பினரும் அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நல்லகண்ணுவை தொலைபேசியில் அழைத்து பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகு இதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது நல்லகண்ணுவிற்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

'பாஜக பேரணியா.. முதல்ல எங்க பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க'..! காவலர்களை கிறங்கடித்த மனு..!