தமிழக ஊர்ப் பெயர்கள் பெயர்கள் அனைத்தும் தமிழில் உச்சரிக்கப்படுவதைப் போலவே ஆங்கிலத்திலும் உச்சரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணையைத் திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேறுமாதிரி உள்ளன. உதாரணத்துக்கு தூத்துக்குடி என்ற தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் Tuticorin என்று அழைக்கிறார்கள். இதேபோல ஆங்கிலத்திலும்  தமிழிலும் ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுகிறன்றன. இதைச் சீர்மைப்படுத்தும் நோக்கில், தமிழில் உச்சரிப்பதுபோலவே, ஆங்கிலத்திலும் ஊர்களை உச்சரிக்கும் வகையில் 1,018 ஊர்களின் பெயர்களை மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.


ஆனால், அரசு அறிவித்த அரசாணை பட்டியலில்டப்பட்டது பல ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் உச்சரிப்பதில் பிழைகள் இருப்பது தெரிய வந்தது. இதை பல அரசியல் கட்சியினரும் தமிழறிஞர்களும் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து அந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய பதிவில், “நிபுணர்கள் உதவியோடு தமிழ் உச்சரிப்புக்கேற்ப சரியான ஆங்கில வார்த்தையை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் புதிய அரசாணை வெளியிடப்படும்” என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.