கொரோனா பாதிக்கப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா உணவு உட்கொள்வதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

சசிகலா உடல்நிலை தொடர்பாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மற்றொருவர் உறுதுணையோடு எழுந்து நடக்கிறார்.

ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா உணவு உட்கொள்கிறார். அனைத்து சிகிச்சைக்கும் சசிகலா போதிய ஒத்துழைப்பு வழங்குகிறார். சசிகலா உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால், அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  

அதேபோல், கொரோனா பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளது.