Asianet News TamilAsianet News Tamil

விமான கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் பயங்கரம்.. மர்ம ஆசாமி குறித்து விசாரணை..

அதற்கு முன்னதாக ஏா்இந்தியா ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனா். அப்போது விமான கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் பாா்சல் ஒன்று இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

 

Gold jewels Rescued in airplane Restroom.. Custem officials Inquiry.
Author
Chennai, First Published Mar 26, 2021, 11:02 AM IST

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை தண்ணீா் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த 18.90 லட்சம் மதிப்புள்ள 408 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு சிறப்பு விமானம் வந்தது. இதே விமானம் மீண்டும் சென்னையிலிருந்து உள்நாட்டு விமானமாக டில்லிக்கு புறப்பட்டு செல்ல தயாரானது. அதற்கு முன்னதாக ஏா்இந்தியா ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனா். அப்போது விமான கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் பாா்சல் ஒன்று இருந்ததை கண்டுப்பிடித்தனா். 

Gold jewels Rescued in airplane Restroom.. Custem officials Inquiry.

இதையடுத்து ஏா்இந்தியா ஊழியா்கள் சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, விமானநிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடக்டருடன் விரைந்துவந்து, தண்ணீா் தொட்டிக்குள் கிடந்த மா்ம பாா்சலில் வெடிகுண்டு எதுவும் உள்ளதா? என்று சோதனையிட்டனா். வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து பாா்சலை எடுத்து பிரித்துப்பாா்த்தனா். அதனுள் பெரிய தங்க செயின் மற்றும் தங்கவளையங்கள் இருந்த்தை கண்டுபிடித்தனர். 

Gold jewels Rescued in airplane Restroom.. Custem officials Inquiry.

பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனா். சுங்கத்துறை அதிகாரிகள் தங்க நகைகளை ஆய்வு செய்து இதன் மொத்த எடை 408 கிராம் என்றும், இதன் மதிப்பு ரூ 18.90 லட்சம் என்று தெரியபடுத்தினர். மேலும்  சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கடத்தல் தங்கநகைகளை விமான கழிவறை தண்ணீா் தொட்டிக்குள் மறைத்துவைத்து சென்ற கடத்தல் ஆசாமி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios