ஊரடங்கு நேரத்தில் அரசின் தடையை மீறி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா பாதிப்பு காரணமாக வழிபாட்டுத் தலங்களை திறக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. கிராமங்களில் உள்ள சிறிய கோயில்களை திறக்க மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த, தமிழக துணை முதல்வரின் மகனும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி ரவீந்திரநாத் குமார், தனது ஆதரவாளர்களுடன் ஆண்டாள் திருக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். 

அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், துணை முதல்வரின் மகன் தடையை மீறி கோயிலுக்குச் சென்ற நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.