கோவா முதல்வா் மனோகா் பாரிக்கா் 48 மணி நேரத்தில் பதவி விலகாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து மீண்டும் அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல் நலம் தேறி வருகிறார். ஆனால், வழக்கமான அலுவல் பணிகளை தொடர முடியாததால், அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 

மாநிலத்துக்குக் கடந்த 9 மாதங்களாக முழுநேர முதல்வர் இல்லாத சூழலில் அரசு எந்திரம் முடங்கியுள்ளது அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் காங்கிரஸ் கட்சி தங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி அமைக்கவும் முயற்சித்து ஆனால் அது பலனளிக்கவில்லை.

 

இந்த சூழலில், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் முதல்வர் இல்லத்தில் போராட்டம் நடத்தினர். மேலும்  48 மணிநேரத்தில் கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர முதல்வருக்கு விட்டுத்தர வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.