The bodies of young men shot and killed by the Sri Lankan Navy fisher MK Stalin paid tribute to kitankukke funeral.

இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட மீனவ வாலிபரின் உடலை, சவ கிடங்குக்கே சென்ற மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 6ம் தேதி, நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையில் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மீனவர் பிரிட்ஜோ என்ற வாலிபர், துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் பலியானதால், மீனவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.


இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் அமைப்பினர்களும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுப்படும் வரை பலியான மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று சந்தித்தார்.
முன்னதாக ராமநாதபுரம் மருத்துவமனையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர் சரோனிடம் நலம் விசாரித்தார்.


பின்னர் மு.க.ஸ்டாலின், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையின் சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மீனவர் பிரிட்ஜோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இறந்த பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களிடம் பேசினார்.

‘‘21 வயது வாலிபர், இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளார். இதனை கண்டித்து கடந்த 6 நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல மட்டுமல்ல போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவை தெரிவிக்கவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.


இதுபோன்ற சம்பவம் நடந்ததை அறிந்தும், மத்திய அரசு, இலங்கைக்கு தனது கண்டனத்தை தெரிவிக்காமல் இருக்கிறது.
மீன் பிடிக்க சென்று உயிரை நீத்த வாலிபருக்காக போராடும் மீனவர்களை சந்திக்க, வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனே வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


ஆனால் மத்திய அரசோ, சுஷ்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள். அப்படியானால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அனுப்புங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு, வெளியுறவு துறை செவி சாய்க்காமல் இருக்கிறது.


கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை சந்திக்க மத்திய அரசு பிரதிநிதிகள் வராதது வெட்ககேடான செயல். வேதனையான செயல். கேரளாவில் நடந்த சம்பவத்தில் இத்தாலி கடற்படையினரை கைது செய்தவர்களுக்கு ஏன் இலங்கை கடற்படையினரை கைது செய்ய முடியவில்லை.

இது போன்ற கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தி பேசியது.இதுதொடர்பாக நான், தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர்களுக்கு கடிதமும் எழுப்பியுள்ளேன்.

வாலிபர் பிரிட்ஜோ மறைவுக்கு அரசு அறிவித்த நஷ்டஈடு கூட எங்களுக்கு தேவையில்லை. நிம்மதியாக தொழில் செய்ய வழி செய்யுங்கள் என கூறி போராடி வரும் மீனவ மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
மாநில அரசோ அதற்கு உரிய அழுத்தமும் தராமல் உள்ளது. எனவே மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை திமுக அவர்களுக்கு துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.