விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்த நாள் என் வாழ்வின் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான நாள் என வைகோ தெரிவித்தார்.

 

2009ம் ஆம் ஆண்டு கரு8ணாநிதி அரசு வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. தேச துரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. பிறகு வைகோ ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’என் வாழ்க்கையில் இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். விடுதலைப்புலிகளை நான் தொடர்ந்து ஆதரித்ததற்காகவும், இந்திய அரசு ஆயுத உதவியும், பண உதவியும் செய்ததால் உலக நாடுகளில் ஆயுதம் வாங்கி இலங்கையில் ராஜபச்சே அரசு லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது என்பதை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரடியாக சென்று மெமோரண்டமாக கொடுத்தோம்.

17 முறை சந்தித்திருக்கின்றேன். இந்த கடிதங்களை தொகுத்து, அண்ணாமலை மன்றத்தில் நூல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு என் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் விசாரித்தது. இளைஞர்களை திரட்டிக்கொண்டு இலங்கையில் தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டால் நாதி இல்லை என்று போய்விடாது. இங்கிருந்து ஆயுதம் ஏந்தி செல்ல தயாராகவும் இருப்பார்கள். 

நான் அதற்கு தலைமை ஏற்று செல்வேன் என்று பேசினீர்களா என்று கேள்வி எழுப்பியது. ஆமாம் பேசினேன் என்றேன். இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என்று பேசினேன். விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக சிறை தண்டனை பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். குறைந்த பட்ச தண்டனை கேட்டதாக நீதிபதி சொல்வது தவறு. அதிகபட்சமாக ஆயு தண்டனை கொடுங்கள் என நீதிபதியிடம் கேட்டேன்’’ என அவர் தெரிவித்தார்.