திருநங்கைகளை அரசாங்கம் மரியாதையுடன் நடத்தினால் தான் , போலீசாரும் மரியாதையுடன் நடத்துவார்கள். அவர்களுக்கு உரிய மரியாதையை அனைவரும் வழங்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
கனிமொழி எம்.பி....அறிக்கை
திருநங்கை தாரா என்பவர் நேற்று அதிகாலை காவல் நிலையத்திற்கு எதிரில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்ச்சி அளிப்பதாக உள்ளது.
காவல் துறையினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் மனமுடைந்து இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

திருநங்கைகளை இந்த சமூகம் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க தி.மு.க முன்னெடுத்த முயற்சிகள் முக்கியமானவை.
தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலானா தி.மு.க ஆட்சியில் 15.04.2008 அன்று “ தமிழ்நாடு அரவாணிகள் நலவாரியம்” தொடங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், தொகுப்பு வீடுகளும், வீட்டு மனைப்பட்டாக்களும் தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டன.

2008-09 –ல் நலவாரியத்தின் மூலம் 25 லட்சத்து 53 ஆயிரம் திநி உதவி வழங்கப்பட்டது. திருநங்கைகளுக்காக 150 சுய உதவி குழுக்கள் அமைக்க நிதி அளிக்கப்பட்டதுடன், சுய தொழில் தொடங்க 64 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
திருநங்கைகளுக்கு கல்விகான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் கல்வி பெறும் உரிமையை வழங்கியது தி.மு.க அரசு தான்.
ஆனால் இன்று, திருநங்கைளுக்கென அமைக்கப்பட்ட நலவாரியம் செயலிழந்த நிலையில், அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. தி.மு.க ஆட்சியில் அரசாங்கம் அவர்களை மரியாதையுடன் நடத்தியதால், காவல் துறையும் பிற துறைகளும் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கின. ஆனால் இன்றோ அரசாங்கமே அவர்களை ஒதுக்க நினைப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
