உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தையை பாஜக கட்சியினரால் கொருரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
இது பற்றி அவர் இரண்டு முறை போலீசில் புகார் அளித்ததை அடுத்து தற்போது அந்த பெண்ணின் தந்தை குல்தீப்பின் தம்பி, மற்றும் சில பாஜக உறுப்பினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆனால் இந்தப் படுகொலை குறித்து போலீஸ் இன்னும் வழக்கு பதியாததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுகுறித்து பலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார்.  இதையடுத்து போலீஸ் அவர்களை கைது செய்து பின்பு விடுதலை செய்தது.

ஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தையை மோசமாக தாக்கியதால் அவருக்கு உடல் முழுக்க காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிந்துள்ளனர். இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதையடுத்து இரவோடு இரவாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பெண்ணின் தந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

உடலில் அதிக அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு இருப்பதாலும், காயங்கள் அதிகம் இருப்பதாலும் அவர் மரணடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.