Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் அவரச ஆலோசனை! கருணாநிதியின் உடல்நிலையால் தமிழகம் முழுவதும் பதற்றம்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் மோசமடைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முதலமைச்சரின் இல்லத்துக்கு விரைந்துள்ளார்.

girija vaithiyanathan meet chief minister

காய்ச்சல் மற்றும் சிறுசீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக  திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

girija vaithiyanathan meet chief minister

இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் அவர் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. முதுமை காரணமாக அவரது உடல் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றக் கொள்ளவில்லை என்றும் 24 மணி நேரம் பார்த்த பிறகே எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனனை நேற்று அறிவித்தது.

இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனையில் இருந்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த சில மணி நேரமாக கருணாநிதியின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துக உபகரணங்களைக் கொண்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிக்சை அளித்து  வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

girija vaithiyanathan meet chief minister

அவரது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும், அபாய கட்டத்தில் உள்ளார் எனவும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சற்றுமுன் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கிரீன்வேய்ஸ் வீட்டுக்கு தலைமைச் செய்லாளர் கிரிஜா வைத்தியநாதன் விரைந்துள்ளார். அங்கு முதலமைச்சருடன்  தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதித்து வருகிறார் என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios