மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுங்க.. அதிமுக சார்பில் ஸ்டாலினை கேட்கும் ஓ. பன்னீர்செல்வம்!
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201- 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.297.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டம் அறிவித்து மாஸ் காட்டிய எடப்பாடி.. அல்லு தெறிக்கும் திமுக.
இதைத்தவிர இன்னும் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வணிக பயன்பாட்டு இடங்கள் போன்றவற்றிலும் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்து, போராட்டமும் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் மின் கட்டண உயர்வை திரும்ப பெறும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்ல மாதாமாதம் மின் கணக்கெடுப்பு வாக்குறுதியை நிறைவேற்றுங்க.. மின் கட்டண உயர்வுக்கு சிபிஎம் அதிருப்தி!
மேலும் வாசிக்க: விடியல் ஆட்சி தரப்போறோம் சொல்லிட்டு! ஒவ்வொரு தலையிலும் இடியை இருக்கிறீங்களே நியாயமா!திமுகவை வச்சு செய்யும் TTV
அதில், “வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை உயர்த்தவும், சிறு மற்றும் குறு தொழில் மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்தவும், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தவும், ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் உயர்த்தவும் உத்தேசித்துள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் செயலாகும். இந்த மின்கட்டண உயர்வு முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சரை அஇஅதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தப் பதிவில் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.